புதுடில்லி: எகிறும் எதிர்பார்ப்பு… பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் செல்கிறார் என்று தகவலக்ள் ெளியாகி உள்ளது. இதனால் இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
பாகிஸ்தானில் வரும், 15 மற்றும் 16ம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சுஷ்மா ஸ்வராஜுக்குப் பின் 9 ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.