சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதையில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளும்கட்சியாக இருந்தபோது அவருடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். ஆளும்கட்சியாக இருந்துபோது அவருடைய கால் கூட தரையில் படாமல்தான் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும்கூட கொரோனா தாக்கத்தின்போது உயிருக்கு பயந்து அனைவரும் பூட்டிய வீட்டிற்குள் இருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர்தான் உயிரை துச்சமென மதித்து மக்கள் களத்தில் நின்று கொரோனாவை வென்று காட்டியவர்.
நிவாரண பணிகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.