திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி., நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு மராத்தி மொழி திணிக்கக் கூடாது, கட்டாயமாக்க வேண்டும் என, அம்மாநில பா.ஜ.க., முதல்வர் ஃபட்னாவிஸ் கூறினார்.
அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ம.தி.மு.க.வில் சில பிரச்னைகளால் எங்களுக்குள் கோபம் ஏற்பட்டது. ஆனால் அந்த கோபம் வைகோவின் மனிதாபிமானத்திற்கு அடிபணிந்துவிட்டது. இனி வரும் காலங்களில் அரசியல் பற்றி நிறைய கற்றுக் கொள்வேன்.

அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல, அதிமுகவுக்கும் நல்லதல்ல. அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைப்பதை கட்சிக்காரர்களுக்கே பிடிக்கவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி உருவான பின்னணி அனைவருக்கும் தெரியும். இந்த கூட்டணி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை, மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஒத்துப்போகாத கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.