நாகை மாவட்டம் பால்பண்ணைச்சேரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மகாராஷ்டிரா தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுப்பது ஜனநாயகப் பேரழிவு. பல மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதானியை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்க கோர்ட் மூலம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 20 சீட் கேட்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பினால் ரூ. 200 கோடி ரூபாய் கேட்டதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து இருந்தார். தைரியம் இருந்தால் அது எந்த கட்சி என்று சொல்ல வேண்டும். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிடம் பணம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. தேர்தல் செலவை தி.மு.க. அதற்காக வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் பகிரங்கமாக கணக்கு கொடுத்துள்ளனர். நாமும் அதிகாரத்தில் பங்கு கொள்ள விரும்புகிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சிக்கு வர போராடுகிறது. டைடல் பார்க், சிப்காட் தொழிற்சாலைகள் போன்றவை வரவேண்டும். ஆனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவை தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.