சென்னை: என்டிஏ-வுக்கு வருகிறதா த.வெ.க..? பாஜகவின் ‘பச்சைக்கொடி’ காட்டிவிட்டதா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காரணம் என்ன தெரியுங்களா?
விரைவில் புதிய கட்சி ஒன்று NDA கூட்டணிக்கு வரும் என இபிஎஸ் கூறி வரும் நிலையில், அது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமாக இருந்தால் தங்களுக்கு மகிழ்ச்சியே என பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலுக்குப் பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதால், அவருடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் பால் கனகராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனால் 2026 தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்!