புதுடில்லி: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ல் 73-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமளித்தலை வலுப்படுத்த கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகள். பொதுச்சேவையிலும் தேசிய சேவையிலும் உங்கள் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது” என அதில் பதிவிட்டுள்ளார்.