தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்தநாளை ஒட்டி
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூர் வள்ளலார் பள்ளி இல்ல மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.
அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில், கும்பகோணம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அழகு.த. சின்னையன் ஏற்பாட்டில் மாநகர கழக செயலாளர் இராம.இராமநாதன் தலைமையில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.