மணிப்பூர் : மணிப்பூர் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவின் பரேன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு நிலவி வரும் தொடர் கலவரத்துக்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் பாஜக ஆட்சிக்கு எதிராக மணிப்பூரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் கலவரங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மணிப்பூர் அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.