சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அ.தி.மு.க., முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்வு செய்வது சட்டப்படி உள்ளது.
முதன்மை உறுப்பினர்களால் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைமை 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைமையை பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் மாற்ற முடியாது. தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடியின் செயல் அதிமுகவின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது, சட்ட விரோதமானது.
தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அவருக்கே சொந்தம். எடப்பாடி தலைமையிலான தற்போதைய கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்ட விரோதமாக செயல்படும் தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் இல்லை. அ.தி.மு.க. அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தின் உரிமை அவருக்கே உண்டு. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.