புதுடெல்லி: பதவியேற்கும் போது பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.