பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நீட் தேர்வை திமுக கொண்டு வந்தது. திமுகவின் காந்திச்செல்வன் 2010-ல் மக்களவையில் நீட் மசோதாவை முன்மொழிந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழலில் கெஜ்ரிவாலின் நிலை தமிழக முதல்வருக்கும் வரலாம். தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்ட பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற தகவலால் முதல்வர் அச்சமடைந்துள்ளார். அமைச்சர் பொன்முடியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? திமுகவை விரட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்றார் ஹெச்.ராஜா.