புதுடில்லி: இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று (பிப்.10) பிரான்ஸ் செல்கிறார்.அங்கு விவிஐபி உச்சி மாநாட்டில், இன்று இரவு விருந்தில் பிரதமர் கலந்துகொள்கிறார்.
அதன் பிறகு 11ம் தேதி செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் ஆகிய இருவரும் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.