புதுடில்லி: மத்திய பட்ஜெட் 2025- 26ஐ தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார். இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இன்று வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் அமர்ந்திருந்த இருக்கைக்கு நடந்து சென்று, தனது எட்டாவது மற்றும் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ததற்கு” நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும், “எல்லோரும் உங்களைப் பாராட்டுகிறார்கள், பட்ஜெட் மிகவும் நன்றாக உள்ளது” என்று அவர் சீதாராமனிடம் கூறியதாக கூறப்படுகிறது.