புதுடில்லி: விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. செழிப்பை அதிகரித்துள்ளன. மேலும் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளன.
மண் ஆரோக்கியம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், அவை பெரிதும் பயனளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக செயலுடன் தொடரும் என்று கூறியுள்ளார்.