புதுடில்லி: இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்றும், மிகவும் ஏழ்மையான முதல்வர் மம்தா பானர்ஜி என்றும் ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 931 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு வெறும் 15 லட்சம் ரூபாய் மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 31 முதலமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு 52.59 கோடி ரூபாய் என்றும் தெரிய வந்துள்ளது. 2023-2024-ல் இந்தியாவின் தனி நபர் வருமானம் 1,85,854 ரூபாயாக உள்ளது என்றும், முதலமைச்சரின் சராசரி வருமானம் 13,64,310 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு 1,630 கோடி ரூபாய் ஆகும். அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா கண்டுவின் சொத்து மதிப்பு 332 கோடி ரூபாய். கர்நாடகா மாநில சித்தராமையாவின் சொத்து மதிப்பு 51 கோடி ரூபாய். ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு 55 லட்சம் ரூபாய். பினராயி விஜயனுக்கு 118 கோடி ரூபாய் சொத்து உள்ளது.
பீமா கண்டுக்கு 180 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், சித்தராமையாவுக்கு 23 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், சந்திரபாவு நாயுடுவுக்கு 33 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 31 முதலமைச்சர்களில் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதல்வர் அதிஷி ஆகிய இருவர்தான் பெண் முதலமைச்சர் ஆவார்கள்.