சென்னை: இந்திய கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர் சிகிச்சைக்குப்பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அக்.10-ந்தேதி அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (100) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வருகின்றனர்.