சென்னை : தமிழக பாஜக தலைவர் திடீரென டில்லி செல்லும் பின்னணி என்ன என்பது குறித்து தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் கூட்டணி அமைப்பது முக்கியமான விஷயமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை வெளியேறும் என்ற நிலை தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தேசிய தலைமையில் அவசர அழைப்பு வந்துள்ளது. அதனால் அவர் ரெண்டு நாட்களுக்குள் டெல்லி செல்வார் என தெரிகிறது. முதலில் அவர் அமித்ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சில மாற்றம் செய்யவும், தேர்தல் வரை அதிமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் இந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்ற அறிவுறுத்தல் இருக்கும் என தெரிகிறது.
இத்தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.