தெலங்கானா: மத்திய அரசை கண்டித்து தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பூஜ்ஜியம் என பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று (பிப்.3) மாநிலம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது.
உரிய நிதியை ஒதுக்காத பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடந்தது என மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.