சென்னை: மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய முதல்வருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி ஒன்றே தீர்வு என்று மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மகான் ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென குமரி மாவட்ட மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த ோரிக்கையை பரிசீலித்து, குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், திருவட்டார், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து மக்களின் வேண்டு ோளை நிறைவேற்றிய முதல்வருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.