புதுடில்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் குறித்து திமுக எம்பி கனிமொழியின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 99 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஜனவரி 30 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுகிறது” என மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின் இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார்.