சென்னை : தனக்கு வாக்களித்த மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
திமுகவும் – பாஜகவும் ஒரு புரிதலுடன் செயல்படுவதால் மக்கள் பிரச்னையைப் பற்றி இருகட்சிகளும் பேசுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் திமுகவும், பாஜகவும் பரஸ்பரம் டிரெண்டிங் செய்வது தொடர்பான கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார். மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர மக்களின் நன்மைக்காக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.