சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று, பாமக மாநில பொருளாளர் திலகவமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாமக இரண்டு அணிகளாகப் பிரிந்துவிட்டதாக சிலர் கூறி வந்தனர். ஆனால் அது உண்மையல்ல. அன்புமணி தலைமையில் பாமக உள்ளது. கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அன்புமணி தலைமையில் எதிர்கொள்ளும்.

அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பாமக கொடியைப் பயன்படுத்த முடியும். சிலர் அன்புமணி தலைவராகத் தொடரக்கூடாது என்று விரும்பினர். அதை நாங்கள் முறியடித்துள்ளோம். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான்.
நாங்கள் அவரை விலக்கவில்லை. கட்சியின் தலைவராக அன்புமணி கூட்டணி குறித்து முடிவு செய்வார். வேட்பாளர்களையும் அவர் அறிவிப்பார். கட்சிக்கு எதிராக செயல்பட்ட அருள் எம்.எல்.ஏ மற்றும் கரூர் பாஸ்கர் ஆகியோரை அன்புமணி நீக்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.