சென்னை: தவெக கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகளில் திருநங்கைகள் விங் 9வது இடத்தில் உள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகளில், திருநர் விங் என்ற பிரிவு 9வது இடத்தில இடம்பெற்றுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா, “நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம்.
அதை 9ஆம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9″ என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா” என கூறியுள்ளார்.