அமெரிக்கா: துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின், அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் டிரம்ப் தொடங்கினார்.
கடந்த 13-ம் தேதி நடந்த கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை டொனால்டு டிரம்ப் தொடங்கியுள்ளார். துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸ் முதன்முறையாக டிரம்புடன் மேடையில் தோன்றி பேசினார்.
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து பல முறை பேசிய டிரம்ப், ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட சொந்த கட்சியின் மூத்த பிரமுகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக விமர்சித்தார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸை பைத்தியம் என்றும், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை மூட்டைப்பூச்சி என்றும் டிரம்ப் சாடினார்.