சென்னை : திமுகவின் பட்ஜெட்டிற்கு தேமுதிக பிரேமலதா ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார். இதனால் திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்ததால் திமுகவுடன் கூட்டணி சேர திட்டமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில், தேர்தல் வருவதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுப்பதாக உறுதிமொழி கொடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இது தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பட்ஜெட்டிற்கு பிரேமலதா ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவுடன் அவர் சேர்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.