சென்னை : ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் 5 ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் என விஜய்க்கும் பதிலடி கொடுத்துள்ளார்.