By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வல்லம் வளம்மீட்பு பூங்காவில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமூகப்பார்வை > வல்லம் வளம்மீட்பு பூங்காவில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
சமூகப்பார்வை

வல்லம் வளம்மீட்பு பூங்காவில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

Nagaraj
Last updated: January 30, 2025 10:07 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த குப்பைகள் சேகரிக்கப்படும் இடம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கிற்கு வளம் மீட்பு பூங்கா என்று பெயர். எந்த வித துர்நாற்றமும் வீசுவது கிடையாது. சுற்றுலாவிற்கு செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்கா உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்த இயற்கை உரங்களை மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை என்று நூற்றுக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

மாடுகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளம் மீட்பு பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வந்து பார்வையிட்டு பயிற்சியும் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான வந்து வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை பார்த்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேரூராட்சி பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை, உரப்படுக்கை அமைக்கப்படும் விதம், மண்புழு உரம் தயாரிப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர்.

இதில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி தரம்பிரிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

You Might Also Like

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை

அதிநவீன என்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை… ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை

நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… 4ம் தேதி தஞ்சைக்கு வரும் விஜய்

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை… மாணவிகள் எண்ணினர்

TAGGED:Resource Recovery ParkstudentsThanjavurVallam Municipalityகுப்பைகள்.தஞ்சாவூர்மாணவர்கள்வல்லம் பேரூராட்சிவளம்மீட்பு பூங்கா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?