May 28, 2024

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு

சென்னை; போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]