தக்காளி, பிஸ்கட் விற்று ஓட்டு சேகரித்த மன்சூர்
வேலூர்: இப்படிதான் ஓட்டு கேட்டணும் போல என்று பொதுமக்கள் நடிகர் மன்சூர் அலிகானின் வாக்குசேகரிப்பை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர். வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி மற்றும் அழிஞ்சி குப்பம் கிராமங்களில் சந்தையில் தக்காளி மற்றும் பிஸ்கட் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.