சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.