தேனி: தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டமே குளு, குளுவென மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி, ‘சின்னச்சுருளி’ என்றழைக்கப்படும் மேகமலை ஆகிய 3 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.