சேலம்: ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 9ம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. நேற்று மாலை முதல் நேற்று மதியம் வரை கடும் பனிப்பொழிவு நீடித்தது.
ஏற்காடு நகர பகுதி, நாகளூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோவில், பகோடா பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. குளிரால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.