சென்னை: ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கு NIA-வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது. ராயப்பேட்டையில் ‘ஹிஸ்புத் தஹ்ரீர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக UAPA சட்டத்தில் 6 நபர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.