உங்கள் உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்க்க விரும்பினால், முட்டை சிறந்த தேர்வாகும். சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்றால் சுவையில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று பலர் கூறுகின்றனர்.
ஆனால் முட்டையை உணவில் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் முட்டைகள் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டிலும் சிறந்தவை.
முட்டை சமைக்க நல்லதா? ஆம்லெட்டாக சாப்பிடுவது சரியா? இந்த கேள்வியை பலர் கேட்கும்போது, முட்டை வெள்ளை மற்றும் மஞ்சள் கரு பற்றிய கேள்வியும் பொதுவானது. முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிட்டால் போதுமா? அல்லது மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிட வேண்டுமா?
ஒரு முட்டையில் சுமார் 70-80 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மற்றும் 1 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அல்புமின் என்றும் அழைக்கப்படும் முட்டையின் வெள்ளைக்கருவில் 90% நீர் மற்றும் 10% புரதம் உள்ளது. 1 முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரிகள் மற்றும் 11 கிராம் புரதம் உள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் கொலஸ்ட்ரால் இல்லை, எனவே அவை இதய நோய் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், முட்டையின் மஞ்சள் கருவில் 55 கலோரிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கோலின் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எனவே, முட்டையின் மஞ்சள் கருவில் 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருப்பதால், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை அளவாக உட்கொள்ள வேண்டும். மேலும், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.