By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.2,700 மருந்துக்கு ரூ.27,000 எம்.ஆர்.பி.? – உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
    1 Min Read
    பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
    2 Min Read
    உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
    2 Min Read
    விடுதியில் ரகசிய வேட்டை… காரில் சிக்கிய யானைத் தந்தங்கள்: வயநாட்டில் 5 பேர் கைது
    1 Min Read
    “நவம்பரில் திரும்பி வருவதாக சொன்னான்…” கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி இளைஞரின் குடும்பம் கண்ணீர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
    தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
    2 Min Read
    சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்
    1 Min Read
    மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
தமிழகம்

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?

Nagaraj
Last updated: September 23, 2026 5:20 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறன் தான்.

குழந்தைகள் அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.

உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.

You Might Also Like

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?

தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;

உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!

சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்

TAGGED:aggressivenessangrychildparentrelationshipஉறவுகுழந்தைகோபம்பெற்றோர்மூர்க்கத்தனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?