சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று (அக்.5) மீண்டும் திறக்கப்படுகின்றன.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 2-ம் பருவ வகுப்புகள் தொடங்குகின்றன.
இதையொட்டி 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயதசமி நாளையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் வருகை, புத்தக விநியோகம், வகுப்பறைத் தயார்நிலை உள்ளிட்டவற்றை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.
