திருப்பரங்குன்றம் மலைப்பிரச்னை தொடர்பாக நாளை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் மதுரை மாநகரில் வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு (163 பிஎன்எஸ்எஸ்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகரில் இன்று காலை முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.