ஈரோடு: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு 15 டன் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நள்ளிரவில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லக்காபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயார் செய்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் இரவு 11.30 மணியளவில் சோதனை நடத்தினர்.
அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.