மதுரை: மதுரை உட்பட தமிழகம் முழுவதும் 17 துப்புரவு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் உள்ளனர். தூய்மைப் பணிகளை கண்காணித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம் விதித்தல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தல், வணிக உரிமம் புதுப்பித்தல், தூய்மைப் பணி விழிப்புணர்வு இயக்கம் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாநகராட்சியில் இவர்களின் பணி முக்கியமானது. மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்களில் 5 சுகாதார அலுவலர்கள் பணியாற்றி வந்தனர். தமிழகம் முழுவதும் 3 சுகாதார அலுவலர்கள் உட்பட 17 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் புதிய சுகாதார அலுவலர்களாக (எஸ்ஓ) பிச்சை (திருப்பூர்), திருமால் (கோவை), ராமச்சந்திரன் (கோவை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய என்.விஜயகுமார், சி.வீரன் ஆகியோர் கோவைக்கும், ராஜ்கண்ணன் திருப்பூர் மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.