சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
13 ரெயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது.