தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவானது.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாலை ஆறு மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 21 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மலைக் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த மழையை பயன்படுத்தி வயலை உழும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.