தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 08ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு, கோயம்பேடு, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், குன்றத்தூர், கோவூர், வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், விநாயகபுரம், கொரட்டூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.