சென்னை: சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி மற்றும் நம்பகமான பாதுகாப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மார்ச்சில் 86,82,457 பயணிகளும், ஏப்ரலில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜுலையில் 3950 பயணிகளும்.
ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 95,43,625 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்டம்பர் 6ஆம் தேதி 3,74,087 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பயண அட்டை மூலம் 30,99,397 பயணிகளும், டோக்கன்களைப் பயன்படுத்தி 7,319 பயணிகளும், குரூப் டிக்கெட் முறையைப் பயன்படுத்தி 7,149 பயணிகளும், க்யூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகளும், 20,90,192 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு QR குறியீடு டிக்கெட், பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm மற்றும் போன் பே என அனைத்து வகையான டிக்கெட்டுகளின் கட்டணத்திலும் 20 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயில் வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் Paytm ஆப் மூலம் பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளைப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.