திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டரில் தீ பிடித்ததால் பொருட்கள் எரிந்து சாம்பலானது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
பள்ளி வளாகத்தில் உள்ள காலை உணவு சமைக்கும் இடத்தில் 3 பெண் ஊழியர்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சமையல் சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து பணியாளர்கள் அலறி அடித்து வெளியேறிய நிலையில் பொதுமக்கள் தீயை அணைத்ததாகக் கூறப்படுகிறது.