வடபழனி: வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் நுழைந்த இளைஞர் காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் உள்ளே நுழைந்ததை தடுத்த காவலரை தாக்கியதாகக் கூறி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அங்கு நேற்றிரவு காவல் பணியில் இருந்த 3-வது பட்டாலியன் காவலரான சிலம்பரசன், பட்டாபிராமை சேர்ந்த ஆகாஷை போதையில் இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார்.
இதனால் ஈடுபட்ட வாக்குவாதத்தில் ஆகாஷ் காவலரை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.