சென்னை: ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்றும் வரும் ஜூலை 1 முதல் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணத்திற்கான உடனடி (Tatkal) டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒருமுறை கடவுச்சொல்) உள்ளிடுவது அவசியம்.
கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யும் போதும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இது ஜூலை 15 முதல் முழுமையாக அமலுக்கு வரும்.
அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், காலை 10:00 முதல் 10:30 வரை ஏசி டிக்கெட்டுகளையும், காலை 11:00 முதல் 11:30 வரை ஏசி அல்லாத டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் போலி பெயர்களில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.