சென்னை: தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது (மமக) பேசுகையில், “மாலையில் மணப்பாறையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது, காலையில் இயக்கப்படுமா?” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், “காலையில் கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான பஸ்களை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.