தஞ்சாவூர்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய மோடி அரசாங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெயரை மாற்றி, ராமர் பெயரில் 100 நாள் வேலையை கொண்டு வரும் மசோதாவை எதிர்த்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச ஒன்றியத் தலைவர் வி.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.
சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்சமின், விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், சி.ஆசைத்தம்பி, டி.சிவகாமசுந்தரி, ஆறுமுகன், மோரிஸ் அண்ணாதுரை, முருக.சரவணன், மற்றும் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
அம்மாபேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நம்பிராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரவி, வி.தொ.ச ஒன்றிய நிர்வாகிகள் பாலமுருகன், ரமேஷ் குமார், அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டங்களில், “100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றுவதைக் கண்டித்தும், வேலையை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, 100 நாள் வேலைத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.