திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் பிரிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் மறையூர் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்சமயம் அமராவதி அணைக்கு வினாடிக்கு 6344 கன அடி நீர்வரத்து உள்ளது மேலும் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படாமல் என்பதால் கரையோர கிராமங்களான கல்லாபுரம் ரூத்ரா பாளையம் கொழூமம் மடத்துக்குளம் காரத்தொழுவு உள்ளிட்ட கரையோர கிராமங்கள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் 84. 30 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.