திருச்சி: போலி முகவரியில் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் மேலூர் தேத்தம்பட்டியைச் சேர்ந்த பழனிகுமார் (46) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.